திருவாரூர், அக்.30:திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா அரசவனங்காடு கிராமத்தில் வசித்து வருபவர் ராகவன் மனைவி வைதேகி (54). இவரது மகள் ஸ்ரீபிரியா (21) இருவரும் தங்களது சொந்த வேலையாக நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் வீட்டில் இருந்து அரசாங்காடு கடைத்தெருவிற்கு ஸ்கூட்டி பைக் மூலம் சென்றனர். அப்போது நாகையிலிருந்து குடவாசல் நோக்கி சென்ற தனியார் கல்லூரி பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டி மீது மோதிய சம்பவத்தில் ஸ்கூட்டியை ஓட்டி சென்ற ஸ்ரீபிரியா மற்றும் பின்னால் அமர்ந்து சென்ற வைதேகி இருவரும் காயம் அடைந்தனர்.
இதனையடுத்து இருவரும் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக வைதேகியின் மூத்த மகள் சீதாலட்சுமி என்பவர் அளித்த புகாரின்பேரில் குடவாசல் போலீசார் தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுனரான கும்பகோணத்தைச் சேர்ந்த ஆகாஷ் (27) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


