நீடாமங்கலம், அக்.29: நீடாமங்கலம் பள்ளியில் மின்கழிவு சேகரிப்பு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு பள்ளியிலும் மின் கழிவு விழிப்புணர்வு நிகழ்வு நேற்று நடைபெற்றது.
நீடாமங்கலம் அரசு உதவி பெறும் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் தேவி லட்சுமி தலைமையில் சுழல் மன்ற மாணவர்கள் தமிழ் வெண்பா, தர்ஷன், ரித்திகா, நதிஷா மோனிஷா, அகியோர் கொண்ட குழுவினர்கள் பள்ளி மற்றும் வீட்டில் பயன்படுத்தி மீதமுள்ள மின் கழிவுகளை சேகரித்து தலைமையாசிரியரிடம் வழங்கினர். பின்னர் பள்ளியில் மின் கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் கழிவு மேலாண்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


