திருத்துறைப்பூண்டி, அக்.29:திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி தனது வீட்டின் அருகே உள்ள கடைத்தெருவுக்குச் சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த மின் வாரிய லைன் இன்ஸ்பெக்டரான முருகையன் (53) என்பவர் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் போலீசார் முருகையன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.


