Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த கோரி திருவாரூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம்

திருவாரூர்,அக்.29: பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட வேண்டும், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதி படி அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும், சிறப்பு கால முறைஊதியத்தில் பணிபுரிந்து வரும் அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர்சுதாகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.