திருவாரூர், ஆக.29: திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் மோகனசந்திரன் மற்றும் எஸ்.பி சதீஷ்குமார் துவக்கி வைத்தனர். திருவாரூர் மாவட்ட காவல் துறை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மோகனசந்திரன் மற்றும் எஸ்பி சதீஸ்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தலைகவசம் அவசியம் அணிய வேண்டும். மற்றும் இதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்தும் வகையில், தலைகவசம் அணியாமல் வருகை புரிந்த வாகன ஓட்டுனர்களுக்கு தலைக்கவசங்களை வழங்கி அறிவுரை வழங்கினர். நிகழ்ச்சியில் ஆர்.டி.ஒ சத்யா, திருவாரூர் நகர காவல் ஆய்வாளர் சுப்ரியா, தாசில்தார் இளங்கோவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.



