Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திருத்துறைப்பூண்டி அருகே பள்ளி விளையாட்டு விழா

திருத்துறைப்பூண்டி, ஆக.29: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேல கொருக்கை, சாய் ஸ்ரீநிவாஸ் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளி நிறுவனர் வெங்கடேசன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். துணைத் தாளாளர் கஜராஜலஷ்மி வரவேற்றார்.

திருத்துறைப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் பாவானியா விளையாட்டு போட்டியை துவக்கி வைத்து மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார். மேலும், ஆலிவலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாதவி மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார். விழாவில் பெற்றோர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி முதல்வர் ராஜகுமாரி சுரேஷ் நன்றி கூறினார்.