Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வலங்கைமான் அரசு பாலிடெக்னிக் என்எஸ்எஸ் மாணவர்கள் மரக்கன்று நடும் பணி

வலங்கைமான், ஆக.29: வலங்கைமான் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுடன் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. வலங்கைமான் அரசு பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்துடன் இணைந்து இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் கும்பகோணம் கும்பேஸ்வரர் அரிமா சங்கம் இவற்றுடன் மரக்கன்றுகள் நடும்விழாவை நடத்தின.

விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஜீவானந்தன் தலைமை வகித்தார். விழாவுக்கு வருகை தந்தவர்களை நாட்டு நல பணி திட்ட அலுவலர் சீதாராமன் வரவேற்றார். மருத்துவர் சாம்பசிவம் முன்னிலை வகித்தார். மருத்துவர்கள் செல்வராசு, பரமசிவம் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் துறைத்தலைவர்கள், மாணவர்கள், அனைவரும் சுமார் நூற்றுக்கும் மேற்கண்ட மரக்கன்றுகளை கல்லூரி வளாகங்களில் நட்டனர். முதல்வரின் நேர்முக உதவியாளர் ராம வேல்முருகன் நன்றி உரை வழங்கினார்.