Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கோவிந்தகுடி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுபான கடை அகற்றப்படுமா?

வலங்கைமான், ஆக.28: வலங்கைமான் அடுத்த கோவிந்தகுடி பகுதியில் மெயின் ரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுபான கடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா கோவிந்தகுடி ஊராட்சியில் ஆவூர் சாலை மெயின் ரோட்டில் அரசு மருத்துவமனை அருகே உள்ள கடை எண்.9847 உள்ளது. இந்த கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இருப்பினும் இது நாள் வரை மதுபான கடை மூடப்படவில்லை.

மூடப்படாத அந்த கடையின் வாசலில் மற்றும் அருகாமையில் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட விபத்து நடந்து வழக்கு பதிவு ஆகியுள்ளது. இதனால் கோவிந்த குடியிலிருந்து ஆவூர் அரசு மேல்நிலை பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை கேள்விக்குறியாக உள்ளது. ஆகவே தமிழக முதல்வர் உடனடியாக கோவிந்தகுடி மதுபான கடையை நிரந்தரமாக மூடுமாறு கோவிந்தகுடி ஊராட்சி மற்றும் ஆவூர் ஊராட்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.