மன்னார்குடி, ஆக. 28: மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக ராஜேஷ் கண்ணன் நேற்று முன்தினம் பொறுப் பேற்றுக் கொண்டார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி காவல் உட்கோட்டத்திற்குட் பட்ட மன்னார்குடி நகரகாவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ராஜ்கமல் எடையூர் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து, சென்னையில் இன்ஸ் பெக்டராக பணியாற்றி வந்த கண்ணன் மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து, திருவாரூர் மாவட்ட எஸ்பி சதீஷ்குமார், மன்னார்குடி காவல் உட்கோட்ட டிஎஸ்பி மணிவண்ணன் ஆகியோரை இன்ஸ் பெக்டர் கண்ணன் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.


