Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

திருத்துறைப்பூண்டி அருகே சோகம் விஷ பூச்சி கடித்து விவசாயி உயிரிழப்பு

திருத்துறைப்பூண்டி,மே 28: திருத்துறைப்பூண்டி அருகே வைக்கோல் எடுக்கும் போது அடையாளம் தெரியாத விஷ பூச்சி கடித்து விவசாயி உயிரிழப்பு. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மணலில் குரும்பல் பகுதியில் வசித்து வருபவர் கல்யாணசுந்தரம் இவரது தாய் மாமா ராஜேந்திரன் (வயது48) சொந்த ஊர் திருவலஞ்சுழி. இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் கல்யாணசுந்தரம் என்பவரது வீட்டில் கடந்த 18 வருடங்களாக விவசாய வேலை செய்து கொண்டு வசித்து வருகிறார். சம்பவத்தன்று வைக்கோல் வைக்கப்பட்டுள்ள இடத்தில் கால்நடைகளுக்கு வைக்கோல் வைப்பதற்காக ராஜேந்திரன் வைக்கோல் எடுத்துள்ளார்.

அப்போது அடையாளம் தெரியாது பூச்சி கடித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக ராஜேந்திரனை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் உயிர் வந்துள்ளார். அடையாளம் தெரியாத விஷ பூச்சி கடித்து உயிரிழந்த சம்பவம் பகுதி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீஸ்சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்,