Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருத்துறைப்பூண்டி அருக குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்

திருத்துறைப்பூண்டி, ஆக. 26: திருத்துறைப்பூண்டி அருகே, நெடும்பலம் தெற்கு தெரு பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், நெடும்பலம் கடைவீதியில் காலி குடங்களுடன் நேற்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பொதுமக்களின் சாலை மறியல் காரணமாக திருத்துறைப்பூண்டி-பட்டுக்கோட்டை இடையே ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் துணை வட்டாட்சியர் ஜோதிபாசு, போலீஸ் எஸ் ஐ. மோகன்ராஜ் மற்றும் ஊராட்சி செயலர் ஜீவபாரதி ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்திய பொதுமக்கள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஒரு மாதமாக நீடித்து வரும் குடிநீர் பிரச்சினைக்கு அதிகாரிகள் விரைந்து தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.