Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

நீடாமங்கலம், ஆக. 26: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி நீடாமங்கலத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் பன்னீர் தலைமை வகித்தார்.

சங்க நிர்வாகிகள் கலியபெருமாள், ராஜேஷ் கண்ணன், தமிழழகன், செல்வி முன்னிலை வகித்தனர். சங்க மாவட்ட தலைவர் முருகானந்தம், மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட நிர்வாகிகள் பாஸ்கர், வடிவேலு, சந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது வருவாய்துறை மூலம் ரூ. 1,500, மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் ரூ. 2 ஆயிரம் மாத உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதேசமயம் தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது மிக குறைந்த உதவித்தொகையாகவுள்ளது. இதனை உயர்த்தி வழங்கவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.