Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழாவையொட்டி 49 பேருக்கு ரூ.1.40 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

திருவாரூர்,டிச.24: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவையொட்டி 49 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 825 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மோகனச்சந்திரன், நாகப்பட்டினம் எம்பி வை.செல்வராஜ் ஆகியோர் வழங்கினர்.

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நடந்தது. திருவாரூர் கலெக்டர் மோகனச்சந்திரன், நாகப்பட்டினம் எம்பி வை.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு 49 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 825 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

25 பயனாளிகளுக்கு தலா ரூ.5,633 மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரத்தினையும், 24 பயனாளிகளுக்கு கிறித்துவ நலவாரிய அட்டையும் என 49 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 825 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், திருவாரூர் ஆர்டிஓ சத்யா, மாவட்ட பிற்படுத்தப்பட்டேர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கர், நகர் மன்றத்தலைவர்கள் புவனப்பிரியா செந்தில் (திருவாரூர்), பாத்திமா பஷிரா தாஜ் (கூத்தாநல்லூர்) உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.