Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

திருவாரூர், ஜன. 24: கலெக்டர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வரால் துவங்கி வைக்கப்பட்டுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகமானது இன்று (24ந் தேதி) திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் நடைபெறுகிறது.

இந்த முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறு மற்றும் பெண்கள் நலம், குழந்தைகள் நலம், கதிரியக்கவியல், நுரையீரல் பிரிவு, சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு மருத்துவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளிக்கின்றனர்.

மேலும் இந்த சிகிச்சையின் போது இரத்த பரிசோதனை, சளி பரிசோதனை, இசிஜி, எக்கோ , அல்ட்ரா சோனோகிராம் உள்ளிட்ட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும் என்பதால் பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியம், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியம் உள்ளிட்ட 20 வாரிய உறுப்பினர்கள் உட்பட அனைவரும் தவறாமல் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.