Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கொரடாச்சேரி அருகே கோயில் பூட்டை உடைத்து நகை கொள்ளை

நீடாமங்ஙலம், அக்.23: கொரடாச்சேரி அருகே கோயிலின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கொரடாச்சேரி அருகே உள்ள முகந்தனூர் கொல்லகண்டம் கிராமத்தில் புற்றடி காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த தங்கத்தால் ஆன தாலி மற்றும் பொட்டு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இவற்றின் மதிப்பு ரூ.50 ஆயிரம் என கூறப்படுகிறது. மேலும் ஆய்க்குடி கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர். இந்த திருட்டுச் சம்பவம் குறித்து புற்றடி காளியம்மன் கோவிலில் நிர்வாகி குமார் என்பவர் கொரடாச்சேரி போலீசில் கொடுத்த புகாரையடுத்து சப் இன்ஸ்பெக்டர் திருவள்ளுவன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.