Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

திருவாரூர் அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது

திருவாரூர்,அக்.23: திருவாரூர் அருகே ரூ.20 ஆயிரம் மதிப்புடைய கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டூர் பாலம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை பிடித்து சோதனை செய்தனர்.

அப்போது அவரிடம் ரூ.20 ஆயிரம் மதிப்புடைய கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து காட்டூர் அகரதிரு நல்லூர் கிராமத்தை சேர்ந்த ஜோதி பாசு மகன் சூரிய தாஸ் (20) என்ற அந்த இளைஞரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.