Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

திருவாரூரில் கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி

திருவாரூர்,ஜன.22: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுரைப்படி, திருவாரூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்நிலை அலுவலர்களுக்கான 2025ஆம் ஆண்டிற்கான புத்தாக்க பயிற்சி திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் நேற்று தொடங்கியது. நாளை (23ம்தேதி) வரை நடைபெறுகிறது.

இப்பயிற்சியில் முதல் நாளான நேற்று திருவாரூர் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கா.சித்ரா, தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையத்தின் இணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குநர் ஜெ.ஆனந்தி, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குநர் சு.முத்துக்குமார்,

மன்னார்குடி சரக துணைப்பதிவாளர் பா.பிரபா, கூட்டுறவு துணைப்பதிவாளர் (பொ.வி.தி) முத்துராஜா, ஸ்ரீ லெட்சுமி நாராயண கூட்டுறவு நகர வங்கியின் துணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குநர் ஆ.பிரகாஷ் ஆகியோர் கலந்துக் கொண்டு பயிற்சியினை துவங்கி வைத்தனர். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை மண்டல இணைப்பதிவாளர் அலுவலக நிர்வாக கண்காணிப்பாளர் நா.இளையராஜா, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் த.கார்த்தீபன் மற்றும் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய பணியாளர்கள் செய்திருந்தனர்.