நீடாமங்கலம்,செப்.18: கொரடாச்சேரி அருகே விநாயகர் ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறில் ஒருவரை தாக்கிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள வெண்ணவாசல் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வன் (19). இவர் பூண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று வெண்ணவாசல் விநாயகர் கோயில் அருகே விநாயகர் ஊர்வலம் செல்லும் பொழுது கலைச்செல்வனுக்கும் களத்தூர் கிராமத்தை சேர்ந்த ஐயப்பன் (35). என்பவருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதன் காரணமாக காயமடைந்த கலைச்செல்வன் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவம் தொடர்பாக கொரடாச்சேரி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் களத்தூர் கிராமத்தை சேர்ந்த ஐயப்பன், அஜித்குமார், காளிதாஸ் மற்றும் 6 பேர்கள் மீது சப்-இன்ஸ்பெக்டர் திருவள்ளுவன் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.


