Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

குடவாசல் தாலுகாவில் உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் கலெக்டர் நேரில் ஆய்வு

வலங்கைமான், ஜூலை 18: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி சரக வருவாய் ஆய்வாளர் அலுவல கத்திலும், வலங்கைமான் பேரூராட்சி வலங்கைமான் சரக வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும், குடவாசல் வட்டம் குடவாசல் சரக வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்ட சிறப்பு முகாமினை திருவாரூர் மாவட்ட கரெலக்டர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு மனுதாரர்களின் மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் உறுப்பினர்களாக பதிவு பெற்றவர்களின் மகன், மகள் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள், தொழிற்கல்வி படிப்புகள், பட்டயப்படிப்புகள் படித்தால் கல்வி உதவித்தொகையும், மேலும், திருமண உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகையும், காசநோய், புற்றுநோய், எய்ட்ஸ், டையாலிசிஸ் ஆகிய நோய்களால் தற்காலிக இயலாமைக்கான உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நேர்வில், தகுதியான கூடுதல் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயனாளிகள் தேர்வு செய்யும் பொருட்டு சரகவாரியாக சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. மேலும் சிறப்பு முகாம்களில் ஒன்றரை வருடத்திற்குள் ஏற்பட்ட இயற்கை மரண நிகழ்வுகளுக்கும் விண்ணப்பிக்கப்பட்டது. இவ்ஆய்வில், வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.