Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

நீடாமங்கலம் மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

நீடாமங்கலம், அக்.17: திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் தனியார் செயின் ஜூட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சிக்கு பள்ளியின் தாளாளர் விக்னேஷ் தலைமை வகித்தார். செயலாளர் அனிரூபிதா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக முனைவர் டாக்டர் கீதா கலந்து கொண்டு மாணவர்களின் படைப்புகளை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து பார்வையிட்டு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

கண்காட்சியில் மாணவர்களின் 170க்கும் மேற்பட்ட படைப்புகள் இடம் பெற்றிருந்தன. இதில் சிறந்த 5 படை படைப்புகளுக்கான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. 5 படைப்புகளும் மாவட்ட அளவில் நடைபெறும் கண்காட்சியில் இடம்பெற உள்ளது. நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் ராஜகோபால் மற்றும் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் பள்ளியின் முதல்வர் வேலவன் நன்றி கூறினார்.