Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மணக்கால் அய்யம்பேட்டை ஊராட்சி அலுவலகம் முன் கவன ஈர்ப்பு அறப்போராட்டம்

வலங்கைமான், அக். 17: குடவாசல் அருகே மணக்கால் அய்யம்பேட்டையில் தமிழக அரசு மற்றும் மணக்கால் ஊராட்சி கவன ஈர்ப்பு காத்திருப்பு அறப்போராட்டம் நடந்தது. குடவாசல் அருகே மணக்கால் அய்யம்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தமிழக அரசின் கவன ஈர்ப்பு மற்றும் மணக்கால் ஊராட்சியின் கடமையை உணர்த்தும் காத்திருப்பு போராட்டம் மக்கள் மகேசன் சக்தி சேவை அமைப்பு நிறுவனர் தென்னரசு தலைமையில் நடந்தது.

மணக்கால் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு புலவநல்லூரில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு தானமாக வழங்கப்பட்ட மைதானம் அமைத்திட வருவாய்த்துறை, வட்டார வளர்ச்சி துறை மற்றும் மாவட்ட கல்வித்துறை நிர்வாகங்கள் ஒன்றிணைந்து செயல்பட கோரி இந்தப் போராட்டம் நடந்தது. இந்த அறப்போராட்டமானது அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.