Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மாமியாருக்கு கொலை மிரட்டல் விடுத்த மருமகன் கைது

திருவாரூர்,அக்.16: திருவாரூர் மாவட்டம் குடவாசலில் மாமியாருக்கு கொலை மிரட்டல் விடுத்த மருமகனை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே கீரத்தங்குடிகிராமத்தில் வசித்து வருபவர் சுப்பிரமணியன் மனைவி பத்மா (60) இவரது மகள் நந்தினி (24). இவரது கணவர் குடவாசல் செல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (29).

கணவன் மனைவி இருவருக்கு மிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு மாத காலமாக நந்தினி அவரது தாய் வீட்டில் வந்து தங்கியிருந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு சென்ற கணவர் வெங்கடேஷ் தனது மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு மாமியார் பத்மாவை தகாத வார்த்தைகள் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது இது தொடர்பாக பத்மா அளித்த புகாரின்பேரில் குடவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேஷை கைது செய்தனர்.