Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

அப்துல்கலாம் பிறந்த தினத்தை முன்னிட்டு அம்மையப்பன் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

நீடாமங்கலம்,அக்.16: கொரடாச்சேரி அருகே அம்மையப்பன் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. கொரடாச்சேரி அருகே அம்மையப்பன் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பான் வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் அம்மையப்பன் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று திருவாரூர் சமூக அமைப்பின் சார்பாக குடிநீர் சுத்திகரிப்பான வழங்கப்பட்டது. அதன் தலைவர் முத்து மாறன், செயலாளர் நேதாஜி கருவியினை தொடங்கி வைத்தனர்.

பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் சதிஸ்குமார் அனைவரையும் வரவேற்றார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் முருகேசன், சிவராமகிருஷ்ணன், வடிவேல் ஆகியோரால்மரக்கன்றுகள் நடப்பட்டன. கை கழுவும் முறை குறித்து மருத்துவர் தேவதாஸ் மாணவர்களுக்கு செய்முறை விளக்கமளித்தார். இறுதியில் ஆசிரியை ஸ்ரீவித்யா நன்றி கூறினார். ஆசிரியைகள் இராஜலெட்சுமி, வாசுகி, பிரியா, தமிழ்காவியா, கிருஸ்ணவேணி ஆகியோர் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.