Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கூடுதலாக 10% ஓய்வூதியம் வழங்க கோரி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் தர்ணா போராட்டம்

திருவாரூர்,அக்.16:8வது ஊதிய குழு ஓய்வூதியர்களுக்கு பொருந்தாது என்ற ஒன்றிய அரசின் வேலிடேசன் சட்டத்தால் ஓய்வூதியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், 70 வயது நிரம்பிய ஓய்வூதியர்கள் அனைவருக்கும் 10 சதவிகித கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்,

ஓய்வூ பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊராட்சி செயலர்கள், பட்டு வளர்ச்சி துறை ஓய்வூதியர்கள், கிராம உதவியாளர்கள் ஆகியோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையிலும், மாவட்ட செயலாளர் ராகுலன் முன்னிலையிலும் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.