திருவாரூர்,அக்.15: திருவாரூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்யாணமகாதேவி கிராமம் அய்யனார் கோவில் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 2 இளைஞர்களை பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம் ரூ.20 ஆயிரம் மதிப்புடைய கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக கல்யாணமகாதேவி கிராமத்தை சேர்ந்த பழனிவேல் மகன் கார்த்திகேயன் (28) மற்றும் கமலாபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சேகர் மகன் தினேஷ் (27) ஆகிய இருவரையும் கைது செய்து திருவாரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நாகை கிளை சிறையில் அடைத்தனர்.


