வலங்கைமான்,அக்.15: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலங்கைமான் ஒன்றியம் சார்பில் ஒன்றிய அளவிலான 6 முதல் 8,9,10மற்றும் 11,12 வகுப்புகளுக்கு மூன்று பிரிவுகளில் வினாடி வினா போட்டி நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் தெய்வ பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. மாணவர்களை வாழ்த்தி வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் குமரேசன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கஸ்தூரி பேசினார்.
திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு அறிவிபல் இயக்க மாவட்ட இனணச் செயலாளர் பிளாட்டா அறிவியல் இயக்க செயற்குழு உறுப்பினர் சிவராமன் வினாடி வினா போட்டிகளை நடத்தி மாணவர்களை தேர்ந் தெடுத்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை அறிவில் இயக்க பொறுப்பாளர்கள் பாலசுந்தரம் நிர்மல் விஜய் சதீஷ் புவனகிரி பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் கலந்து கொண்ட அனைவருக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


