முத்துப்பேட்டை, அக்.14: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியம் புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விருது பெற்ற அங்கன்வாடி பணியாளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் பொறுப்பு ஆரோக்கிய அந்தோணி ராஜ் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் நூர் நிஷா முன்னிலை வகித்தார்.
இவ்விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிவு திட்டத்தின்படி தேசிய ஊட்டச்சத்து மாத விழா 2026ஐ முன்னிட்டு போஷன் அபியான் திட்ட செயலியின் போசன் ட்ராக்கில் பதிவு செய்த பயனாளிக்கு சிறப்பாக பதிவேற்றம் செய்தமைக்காக விருது பெற்ற புதுத்தெரு பள்ளியில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர் புனிதாவை பாராட்டி சிறப்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஜேஆர்சி ஒருங்கிணைப்பாளர் செல்வ சிதம்பரம், ஆசிரியர்கள் அமிர்தம், பெல்சி ராணி, செல்வகுமார், சரண்யா, சங்கீதா, சுகுணா மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


