முத்துப்பேட்டை, அக்.14: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாவட்ட துணைத் தலைவர் அப்துர் ரஹ்மான் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் நைனா முகம்மது நிர்வாகிகள் அப்துல் சமது, சாகுல் ஹமீது ஆகியோர் திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் சென்று, மாவட்ட கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
முத்துப்பேட்டை பேரூராட்சியில் குப்பைகள் அள்ளப்படாமல் தெருக்கள் தோறும் குப்பை மேடுகளாக காணப்படுகின்றன. தெரு விளக்குகள் பழுதடைந்து வீதிகள் இருள்களில் சூழ்ந்துள்ளது, வீதிகள் தோறும் சாலைகள் அமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. குடிநீர் பிரச்னை, பன்றிகள் தொல்லை, தெருநாய்கள் தொல்லை, சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என்று என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


