Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

தீபாவளி போனஸ், கூலி உயர்வு கேட்டு டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், அக். 14: தீபாவளி போனஸ் மற்றும் கூலி உயர்வு வழங்க கோரி டாஸ்மாக் சுமை பணி தொழிலாளர்கள் சங்கத்தினர் திருவாரூரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்,

அட்டைப் பெட்டிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கூலி தொகையை ரூ.5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பாக நேற்று டாஸ்மாக் சுமை தூக்கும் தொழிலாளர் சிஐடியூ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.