மன்னார்குடி, செப். 11: ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய உயர் அதிகாரிகள் அவ்வப் போது ஆய்வு செய் வது வழக்கம். அந்த வகையில், திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லூர் 20 வது வார்டு ஜாவியா தெருவில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையை நகர் மன்ற தலைவர் பாத்திமா பஷீரா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கடையில் பொருட்களின் இருப்பு சரியாக உள்ளதா என்பதை சோதனை செய்தார்.
மேலும், கடையில் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் பரிசோதித்து, அதன் தரம் குறித்து பணியாளரிடம் கேட்டறிந்தார். மேலும், மின்னணு தராசு கள் மற்றும் விற்பனை முனைய கருவிகள் சரியாக செயல் படுகின்றனவா என்பதை ஆய்வு செய்ததுடன், குடும்ப அட்டைகளுக்கு போதுமான அளவு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் முறையாக வழங்கப் படுகிறதா என்பது குறித்து, குடும்ப அட்டைதாரர்களிடம் கேட்டறிந்தார்.


