நீடாமங்கலம்,செப். 11: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமு இவரது மனைவி முல்லை யம்பாள்(80). இவர் கடந்த 10 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு திரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை 3.35 மணி அளவில் நீடாமங்கலம் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் பொழுது திருச்சியில் இருந்து காரைக்கால் சென்ற குட்ஸ் (சரக்கு ரயில்) மோதி யதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருந்தார்.
தகவல் அறிந்த தஞ்சாவூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குமார், பெண் தலைமை காவலர் புனிதா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


