திருவாரூர்,அக்.10: திருவாரூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருவாரூர் காரைக்காட்டு தெருவில் இயங்கி வரும் ஜி.ஆர்.எம்.அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.
இதனையொட்டி பள்ளி வளாகத்தில் இருந்து பேரணியை தலைமையாசிரியை ராஜலட்சுமி கொடியசைத்து துவக்கி வைத்தார். பேணியானது தொடர்ந்து கீழவீதி, பனகல் சாலை வழியாக கலைஞர் பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை அடைந்து முடிவற்றது. இதில் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவிகள் சார்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


