திருவாரூர், அக். 10: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி முகந்தனூர் கிராமத்தில் வசித்து வருபவர் சுதாகர் மகன் ஜெரால்டு (30). கூலி தொழிலாளியான இவர் திருவாரூர் விளமல் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில். தற்போது அந்த பெண் 3 மாதம் கர்ப்பமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு ஜெரால்டு மறுத்துவிட்டதாக சம்பந்தப்பட்ட பெண் சார்பில் திருவாரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின்பேரில் போலீசார் ஜெரால்டு மீது வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.


