திருவாரூர்,அக்.10:திருவாரூர் டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அண்ணா காலனி சுடுகாடு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது அவர்களிடம் ரூ.3 ஆயிரம் மதிப்புடைய கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து திருவாரூர் நெய்விளக்கு தோப்பு அண்ணா காலனியைச் சேர்ந்த கண்ணன் மகன் மின்னல் ராஜ் (22) மற்றும் அதே தெருவை சேர்ந்த முருகன் மகன் ஐயப்பன் (22), சுதாகர் மகன் அருள் தாஸ் (21) ஆகிய மூவரையும் கைது செய்து அவரிடமிருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.


