Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திமுக ஆட்சியில் ரூ.2.61 கோடி நிதி ஒதுக்கிய ஆயிரம் ஆண்டு பழமையான கட்டிமேடு ஜம்புகேஸ்வரர் கோயில் திருப்பணிகள் மந்தம்

திருத்துறைப்பூண்டி, செப். 10:திமுக ஆட்சியில் நிதி ஒதுக்கிய கட்டிமேடு ஊராட்சியில் ஆயிரம் ஆண்டுக்கு பழமையான ஜம்புகேஸ்வரர் சிவன் கோயில் ரூ.2 கோடி 61 லட்சத்தில் புதிதாக கோயில் கட்டும் பணி மந்தமாக நடைபெறுகிறது இதனை விரைந்து முடிக்க ஊர்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு எல்லைநாகலடி இந்து சமய அறநிலையத்துறை சொந்தமான ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையான மிகவும் சிதலமடைந்திருந்த சிவன் ஆலயம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலுக்கு இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்த கோவிலுக்கு புதிய கட்டுமான புனரமைப்பு மற்றும் கோவில் கும்பாபிஷேகத்திற்காக ரூபாய் 2 கோடியே 61 லட்சம் நிதி ஒதுக்கி இருந்ததனர்.

புதிய கோயில் கட்ட பூமி பூஜை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது. பணி தொடங்கி ஒரு ஆண்டு மேல் ஆகியும் பணி மந்தமாக நடைபெறுகிறது. பணி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.