நீடாமங்கலம், செப்.10: நீடாமங்கலம் ஒன்றியம் மார்க்சிஸ்ட் கட்சியில் கட்சி உறுப்பினர் கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சி உறுப்பினர் கார்டு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் ஜான்கென்னடி தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பேரவையில் மாவட்டசெயலாளர் முருகையன், செயற்குழு ராதா மாவட்ட குழு கலியபெருமாள் கட்சி ஸ்தாபனம் குறித்து பேசினார்கள் மற்றும் ஒன்றியகுழு அண்ணாதுரை, காளியப்பன், முருகேசன், ராஜா, ராஜேந்திரன், குருமூர்த்தி, ராபர்ட்பிரைஸ், பாண்டியன், வாலிபர்சங்கம் ஒன்றிய செயலாளர் இளந்தமிழன், கிளை செயலாளர்கள் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


