Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஏற்றுகூலி உயர்த்தி வழங்க கோரி சுமைப்பணி தொழிலாளர்கள் திருவாரூரில் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், செப்.10: மது பாட்டில்களுக்கான ஏற்றுக் கூலியினை உயர்த்தி வழங்க கோரி சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் டிரான்ஸ்போர்ட் டெலிவரி சுமை பணி தொழிலாளர்களுக்கு லாரியில் கொண்டு சென்று கடைகள் முன்பு இறக்கி வைக்கும் பணிக்கு பெட்டி ஒன்றுக்கு ரூ.10 வழங்கிட வேண்டும், பெட்டி அடுக்கு கூலியாக பெட்டி ஒன்றுக்கு ரூ.5 வழங்கிட வேண்டும், லாரி ஓட்டுனர்களுக்கு நாள் ஒன்றுக்கு சம்பளம் ரூ.ஆயிரம் வழங்கிட வேண்டும்,

அனைத்து டிரான்ஸ்போர்ட் டெலிவரி சுமை பணி தொழிலாளர்களுக்கு சட்டப்படி பிஎஃப், இஎஸ்ஐ அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பாக சிஐடி தொழிற்சங்கம் சார்பாக சுமைப்பணி தொழிலாளர்கள் மண்டல பொறுப்பாளர் பாலாஜி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் ஜோதிபாசு மற்றும் பொறுப்பாளர்கள் வீரபாண்டியன், கஜேந்திரன் கார்த்திகேயன் அருள்தாஸ் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.