Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

முத்துப்பேட்டை வட்டாரத்தில் காச நோய் இல்லாத 5 ஊராட்சிகள் தேர்வு

முத்துப்பேட்டை,அக்.9: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வட்டாரத்தில் உள்ள 29ஊராட்சிகளிலும் வட்டார மருத்துவத்துறை சார்பில் சமீபகாலமாக இந்திய தேசிய காச நோய் ஒழிப்பு திட்டத்தின்படி மருத்துவக் குழுவினர்கள் மூலம் தீவிரமாக காச நோய் ஒழிப்பு பணிகள் மற்றும் சிறப்பு முகாம்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் இந்திய தேசிய காச நோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் முத்துப்பேட்டை வட்டாரத்தில் காசநோய் இல்லாத ஊராட்சிகள் சமீபத்தில் கண்டறியப்பட்டது.

இந்த வட்டாரத்தில் உள்ள 29 ஊராட்சிகளில் பாண்டி, கற்பகநாதற்குளம், கீழநம்மங்குறிச்சி, வங்கநகர், தம்பிக்கோட்டை கீழக்காடு ஆகிய ஊராட்சிகள் காசநோய் இல்லாத ஊராட்சிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த ஐந்து ஊராட்சிகளையும் ஊக்குவிக்குவிக்கும் வகையில் விருது வழங்கி பாராட்டும் நிகழ்வு நேற்று முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.

இதற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பாலாமணி தலைமை வகித்தார். இதில் தேர்ந்து எடுக்கப்பட்ட அடிப்படையில் காசநோய் இல்லாத ஊராட்சிகளின் செயலர்களை ஊக்குவிக்குவிக்கும் வகையில் சிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

மேலும் காசநோய்க்கு எதிரான உறிதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டு காச நோய் தொடர்பான விழிப்புணர்வு அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதில் காசநோய் துணை மருத்துவர் முகமது ஆசிக், மருத்துவ அலுவலர்கள் டாக்டர் சைலக், டாக்டர் கார்த்தி, டாக்டர் வைஷ்ணவி மற்றும் காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் விக்னேஷ்வரன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.