Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஆலங்காடு அரசு பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் ஆர்ஓ வாட்டர்பில்டர் வழங்கல்

முத்துப்பேட்டை,அக்.9: முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு அரசு தொடக்கப்பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் ஆர்ஓ வாட்டர் பில்டர் வழங்கினர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுற்று பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் குடிநீருக்கு மிகவும் சிரமம்பட்டு வந்த நிலையில் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களான பள்ளி மேலாண்மை குழு தலைவி பரமேஸ்வரி, வீரசேகரன், நாகராஜ் ராஜஸ்ரீ ஆகியோர் இணைந்து ரூபாய் 20ஆயிரம் மதிப்புள்ள ஆர்ஓ வாட்டர் பில்டர் ஒன்றை வழங்கினர். இந்தநிலையில் மாணவர்களின் நலனில் அக்கறைகொண்டு ஆர்ஓ வாட்டர் பில்டரை வழங்கிய பள்ளியின் முன்னாள் மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.