திருத்துறைப்பூண்டி,அக்.9: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக வேல்முருகன் பொறுப்பேற்றுக்கொண்டார். கோவை (வடக்கு) சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த வேல்முருகனுக்கு சார்பதிவாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இதையடுத்து, திருத்துறைப்பூண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் புதிய சார்பதிவாளராக வேல்முருகன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.அவருக்கு அலுவலக பணியாளர்கள் மற்றும் பத்திர பதிவு எழுத்தர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


