Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடி மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் உடைப்பு

திருத்துறைப்பூண்டி, செப். 9: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடி மெயின் ரோடு பெட்ரோல் பங்க் அருகில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் பிரதான குடிநீர் பைப் லைன் உடைந்து, கடந்த ஒரு வாரமாகவே பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகிறது.திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 மாதங்களாகவே பல்வேறு இடங்களில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் குடிநீருக்காக அவதிப்பட்டு குடிநீர் கேட்டு தினந்தோறும் சாலை மறியல் போராட்டம் நடத்திவருகின்றனர். ஆனால் மறுபுறம் குடிநீர் திட்ட குழாய் பல இடங்களில் உடைந்து அதிகளவில் தண்ணீர் வீணாகிறது.

இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே விளக்குடி மெயின் ரோடு பெட்ரோல் பங்க் அருகில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் பிரதான குடிநீர் பைப் லைன் உடைப்பு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட பைப் லைன் உடைப்பை உடனடியாக சீரமைத்து, வீணாகும் குடிநீரை தடுத்து, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் கிடைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.