Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

டெங்கு ஒழிப்பு பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்குவதை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்

திருவாரூர், செப். 9: திருவாரூர் நகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்குவதை கண்டித்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழகம் முதல்வர் விஜய் உத்தரவிட்டபடி திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபடுவதற்காக 31 தொழிலாளர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெங்கு கொசு ஓழிப்பு பணியில் ஈடுபடும் தொழிலாளர்களை, குளம் குட்டைகளில் குப்பைகள் அள்ளுதல், சாக்கடைகளை தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட மாற்று பணிகளை செய்யுமாறு திருவாரூர் நகராட்சி நிர்வாகம் அழுத்தம் கொடுப்பதாக கூறி திடீரென தொழிலாளர்கள் நேற்று நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தொழிலாளர்களுடன் கமிஷ்னர் சுரேந்திரஷா நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.