Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஆத்தூர் கிராமத்தில் திருமணமாகாத விரக்தியில் இளைஞர் தற்கொலை

திருவாரூர், ஜன. 9: திருவாரூர் அருகே திருமணமாகாத விரக்தியில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் அருகே ஆத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் உத்திராபதி மகன் முருகேசன்(45). இவரது தம்பி சரவணன்(42). இவருக்கு பெண் கிடைக்காததால் திருமணம் ஆகாத விரக்தியில் இருந்து வந்த நிலையில் குடிப்பழக்கத்திற்கு ஆளானார்.

இந்நிலையில் கடந்த மாதம் 26ந்தேதி வீட்டில் யாருக்கும் தெரியாமல் களைக்கொல்லி மருந்தினை மதுவில் கலந்து குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றதையடுத்து சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சிகிச்சையில் இருந்து வந்த சரவணன் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணன் உடலை பிரேத பரிசோதனைக்காக கைப்பற்றி எடுத்து சென்றனர்.