திருத்துறைப்பூண்டி, அக். 8: திருத்துறைப்பூண்டியில் ஊரக உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்தப் பயிற்சியில் ஊராட்சி செயலர்கள், சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மற்றும் கிராம வறுமை ஒழிப்புச் சங்கஉறுப்பினர், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர், சுய உதவிக்குழு உறுப்பினர் பயிற்சி பெற்றனர்.
மேலும், திருவாரூர் உதவி இயக்குநர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணிமேற்பார்வையாளர்கள் மற்றும் சாலை ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பயிற்சியின் மூலம் கிராமப்புற மேம்பாடு தொடர்பான பணிகளை மேற்கொள்வது, கணக்கெடுப்பு மற்றும் களப்பணிகளில் குழு உறுப்பினர்களின் பங்களிப்பு உள்ளிட்டவை குறித்து பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.


