நீடாமங்கலம், அக். 8: நீடாமங்கலத்தில் கிராமப்புற வேளாண் பணி அனுபவம் பெற வேளாண் மாணவிகள் வந்தனர். நாகப்பட்டினத்தில் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு பயிலும் கல்லூரி மாணவர்களால் கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டமானது திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் கோட்டூர், குடவாசல், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஒன்றியங்களில் துவங்கப்பட்டது.
இக்கிராமப்புற வேளாண்பணி அனுபவத் திட்டமானது 80 நாட்கள் நடைபெற உள்ளது. கல்லூரி மாணவர்கள் 6 குழுக்களாக பிரிந்து வெவ்வேறு ஒன்றியத்தில் இப்பணியை மேற்கொள்கின்றனர். நீடாமங்கலத்தின் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்கம் மையம் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம் பேராசிரியர்களிடம் இருந்து கல்லூரி மாணவிகள் நீடாமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 10 கிராமங்களில் இருந்து விவசாயிகளின் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொண்டனர்.


