திருவாரூர், அக். 8: சுமை தூக்கும்தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கிட கோரி திருவாரூரில் நேற்று டி.என்.சி.எஸ்.சி சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமை பணி தொழிலாளர்கள் பற்றாக்குறையால் நிறுத்தப்பட்டுள்ள திருவாரூர் நவீன அரிசி ஆலையினை உடனே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அரிசி ஆலையில் முறைப்பணிக்கு சுமை பணியாளர்களை உடனே நியமிக்கவேண்டும்,
2022ம் ஆண்டிலிருந்து உயர்த்தப்படாமல் உள்ள அனைத்து சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும் உடனே கூலி உயர்வை அறிவித்திட வேண்டும், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி வழங்கிட குழு அமைத்திட வேண்டும். பச்சை நிற அடையாள அட்டை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று ரயில் நிலையம் எதிரில் இருந்து வரும் அரசு நவீன அரிசி ஆலை முன்பாக சுமைதொக்கும் தொழிலாளர்கள் சங்கத்தினர் கிளைத் தலைவர் பாலு தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


