திருவாரூர் தண்ணீர் வழங்காததை கண்டித்து குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்
திருத்துறைப்பூண்டி, செப்.5: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்திருக்கிற குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் எப்பொழுது தீரும் எங்கள் தண்ணீர் தாகம் என்ற கோரிக்கை முழக்கத்தோடு 200க்கும் மேற்பட்டவர்கள் பி எஸ் ஆர் மணிமண்டபத்தில் இருந்து ஊர்வலமாக சென்று குடிநீர் வாரியத்தை முற்றுகையிட்டனர். போராட்டத்தில் மாநில குழு உறுப்பினர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் காரல் மார்க்ஸ் முன்னிலை வைத்தார். மாவட்ட குழு உறுப்பினர்கள் சாமிநாதன் வேலவன் விவசாய சங்க ஒன்றிய தலைவர் சுப்ரமணியன் கட்சியின் மூத்த தலைவர்கள் வேதரெத்திணம், வடிவேல், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பிரகாஷ், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் கலைச்செல்வி ஒன்றிய குழு உறுப்பினர்கள் வீராசாமி , ரவி, மதியழகன் ,முத்து செல்வன் ,வீரசேகரன், சுந்தரேசன் , வேணுகோபால் , உலகநாதன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


