Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

உலக தேங்காய் தினம் அரசு பள்ளி மாணவர்களுக்கு தென்னை கன்று வழங்கல்

திருத்துறைப்பூண்டி, செப்.5: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் 40 பேருக்கு டவுன் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் உலக தேங்காய் தினத்தை முன்னிட்டு தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார்.

முன்னாள் தலைவர் வேதமணி நாட்டு நலப்பணித்திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர்சக்கரபாணி,முன்னாள்செயலாளர் சுப்பிரமணியன் முன்னாள் பொருளாளர் ரகுராமன், ஆசிரியர்கள் பாக்கியராஜ், கருணா மூர்த்தி முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் பாஸ்கரன் வரவேற்றார். வட்டாரத் தலைவர் சபரிநாதன் தென்னை மரத்தின் பயன்கள் குறித்து பேசினார்.மாணவன் கமலேஷ் நன்றி கூறினார்.