Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

ஊழியர்கள் போராட்டத்தால் திருத்துறைப்பூண்டி பகுதிகளில் 9 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருத்துறைப்பூண்டி,செப்.5: பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து உடனடியாக மீண்டும் பணி வழங்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தால் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் 9 கடைகள் மூடப்பட்டதால் மது பிரியர்கள் தவிப்பு. காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் பணியில் டாஸ்மாக் ஊழியர்களை ஈடுபடுத்தக்கூடாது, ஊழியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்,

எவ்வித விசாரணையும் நடத்தாமல் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து உடனடியாக மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் காரணமாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் செயல்பட்டு வந்த 9 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் வழக்கமாக மதுபானங்கள் வாங்குவதற்காக கடைகளில் குவியும் மது பிரியர்கள், மது கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது.