திருத்துறைப்பூண்டி, ஆக. 5: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 26 அரசு நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10 வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சியளிக்கப்பட்டது. திருத்துறைப்பூண்டி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் இளங்கோவன் மற்றும் செல்வம் தலைமைவகித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி தலைமை வகித்தார். இதில் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் கங்கா, பாஸ்கர் மற்றும் இப்பள்ளியின் ஆசிரியர் துரை ஆகியோர் கலந்து கொண்டனர். கராத்தே பயிற்றுனர் கலைக்காவியா மாணவிகளுக்கு பயிற்றுவித்தார். இந்த நிகழ்வில் பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலையின் அவசியம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
